
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் அரசு இறுதி முடிவு எடுக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.