
தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்களை தங்கு தடை இன்றி விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது வருகிற ஞாயிற்றுக்கிழமை அதாவது வருகிற 27ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
அதாவது வருகிற ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்பதால் அன்றைய தினம் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களை தீபாவளி பண்டிகையில் பொருட்கள் சிரமம் என்று கிடைக்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாக அமைச்சர் அறிவித்துள்ளார்.