தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமாகிறது. நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை அதாவது மொத்தம் 25 நாட்களுக்கு அதன் தாக்கம் இருக்கும்.

மேலும் மே 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பிப்பதால் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் குறிப்பாக மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.