தமிழகத்தில் கோடை காலத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருவதால் விலங்குகள் மற்றும் பறவைகள் வெயிலின் தீவிர தாக்கத்தின் காரணமாக ஆங்காங்கே உயிரிழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்கள், தொழிலாளர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோம் பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் திறந்தவெளியில் பணியாற்றுவோருக்கு வெப்ப அலைக்கு முன்பாக பணியை முடிக்க வகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திறந்தவெளியில் பணியாற்றுபவருக்கு குடிநீர் வசதி, ஓ ஆர் எஸ் மற்றும் முதலுதவிக்கான பொருள்கள் வைத்திருக்க வேண்டும். வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற் கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.