தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இவரைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சார்ந்த விவரங்கள் மற்றும் மாற்றுச் சான்றுகளை எமிஸ் இணையதளத்தில் வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதே சமயம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களையும் ஜூன் 13ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களின்படியும் மாணவர்களுக்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் விநியோகம் உட்பட அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.