தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி கூடிய நிலையில் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவியருக்கு விடுதி கட்டித் தரப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.