தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளை வரவேற்றார். அதோடு மாணவிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் பேசியதாவது “நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மொத்தம் 1.31 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்.

இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி வழங்கவேண்டும். ஆகவே ஆசிரியர்கள் அதற்கான இலக்கை நிர்ணயித்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அடிப்படை தேவையான தண்ணீர் அனைத்து வகுப்பறைகளிலும் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதோடு மாநில கல்வி கொள்கை தொடர்பான அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.