
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்த நிலையில் மாலை 6:00 மணி ஆகியும் அவர்களை விடுவிக்காததால் அண்ணாமலை கடும் வாக்குவாதம் செய்தார். அப்போது இனி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஆணி அடித்து பிரேம் போட்டு ஒட்டுவோம் என்று கூறினார்.
இதேபோன்று தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிர் அணி மற்றும் பாஜக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஸ்டாலின் அப்பா என்ற வாசகத்துடன் ஒட்டி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோக்களை தமிழக பாஜக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு பதிவில் அண்ணாமலை சொன்னார் அக்கா சிங்கப்பெண் செஞ்சார் என்ற பதிவுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் அடக்கு முறையை மீறி ஊழல் அரசின் அப்பா மு.க ஸ்டாலின் புகைப்படத்தை டாஸ்மாக் கடைகளில் ஒட்டி சம்பவம் செய்த நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சிங்க பெண்கள் !!!@annamalai_k #TasmacScam pic.twitter.com/dKlkaYdil8
— Rajeshkumar (@RajeshM_bjp) March 19, 2025
எல்லா ஊர்லயும் பாஜக நிர்வாகிகள் படங்களை ஒட்டினார்கள்..
ஆனா திருப்பூர் வடக்கு மாவட்டம், மக்களின் சார்பாக மக்கள் பிரதிநிதி “On Fire” 🔥#DMKFailsTN #DMKLiquorScam pic.twitter.com/v6Rsuzqjbx
— Kcmb Srinivasan (@Kcmb_srinivasan) March 19, 2025