சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் பொழுது கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் அப்துல் சமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அதாவது சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் விதமாக வட்டி இல்லா கடன் அளிக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த கே ஆர் பெரிய கருப்பன் , கூட்டுறவு துறை மூலம் வட்டியில்லா கடன் கொடுப்பது சாத்தியமில்லை.

மக்களுடைய பங்களிப்பு மூலமே கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. பொது மக்களுடைய வைப்புத் தொகை, வட்டி மூலமாக பெறப்படும் தொகை போன்றவற்றால் கூட்டுறவு வங்கிகளும், நாணய சங்கங்களும் இயங்கி வருகிறது. எனவே வட்டி இல்லாமல் கடன்களை கூட்டுறவு வங்கிகளால் கொடுக்க முடியாது. கடன் கொடுப்பதற்கான முடிவுகளை துறை தன்னிச்சையாக எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.