தமிழகத்தில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாத காரணத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் செய்யும் நிலைமை நீடித்து வருகிறது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காலியிடங்கள் பல நிரப்பப்படாமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார்  மரணம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. அவர் சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் விடுமுறை எதுவும் இல்லாமல் தொடர்ந்து பணியில் இருந்ததாகவும் மற்ற காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த ஒரு மன அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் கட்டாயமாக  போதுமான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான நேரங்களில் விடுப்பு கேட்கும் பொழுது கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பணியமர்த்தக்கூடாது  எனவும் DGP சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.