தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்காக வழங்குகிறது. அந்த வகையில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அரசு சமீபத்தில் கடன் மானிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த 55 வயதுக்குட்பட்டவர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 1.5 கோடி லட்சம் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்திற்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக இந்த திட்டத்தில் வேளாண்மைக்காக விண்ணப்பிக்க முடியாது. அது தவிர உற்பத்தி, வணிகம், சேவை உள்ளிட்ட எந்த ஒரு புதிய தொழில் தொடங்கவும் கடன் பெறலாம்.  65% வங்கி கடன் ஏற்பாடு,  35 சதவீதம் அரசின் பங்காக  மானியம் வழங்கப்படும். மேலும் வங்கியில் வாங்கும் கடனுக்கு ஆறு சதவீதம் வட்டியை அரசே செலுத்தி விடும். இந்த திட்டத்தில் சேர விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.