தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்றவாறு கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதியை பெறும்போது ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஊதிய உயர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஊக்கத்தொகை குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் பட்டம் மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.