தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வர வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதோடு ஈட்டிய விடுப்புச் சரண், திருமண உதவித்தொகைக்காண முன் பணம் அதிகரிப்பு உள்ளிட்ட 9 அறிவிப்புகள் அரசு ஊழியர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அரசாங்கம் மே மாத சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படியும் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இது அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.