சமூக நல இயக்குநரகத்தின் கீழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மங்கள மாலை திட்டத்தின் மூலம் புகலிடம் அளிக்கப்பட்டு திருமண வயதை அடையும் பொழுது பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவி புரிவதோடு அப்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்வதையும் தடுக்கிறது.

தாய், தந்தை இருவரும் இல்லாத ஆதரவற்ற 18 வயது நிரம்பிய பெண்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். இந்த ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளலாம்.