தமிழக பட்ஜெட் பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி பார்க் , டைட்டில் பார்க், நியோ டைடல் பார்க் ஆகியவற்றை கட்டுவதற்கு பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் 350 கோடி மதிப்பில் 6.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு டைடல் பார்க் மற்றும் 120 கோடி மதிப்பில் சிப்காட் பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேசமயம் மதுரை மற்றும் சென்னை போன்ற 10 இடங்களில் புதிதாக ஐடி பார்க் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் டைட்டில் பார்க் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஒரே நாளில் முதல்வர் நடத்தி முடித்தார். இவ்வாறு புதிதாக கட்டப்படும் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் மூலமாக தமிழகத்தில் 13,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தற்போது அறிவித்துள்ளார்.