தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிதில் கற்பிக்கும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளிகளில் உள்ள உயர்தர கணினி ஆய்வகங்களில் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.