தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தினம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று கண்காணிக்க வேண்டும் என்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அங்கு மருத்துவ முகாம் அமைக்கவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது