
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான பொருள்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது கூட்டுறவு துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கியின் சேவிங்ஸ், பிக்சட் டெபாசிட், லோன் திட்டங்கள் குறித்த கையேடு வினியோகிக்கவும், சேமிப்பு கணக்கு தொடங்குவது தொடர்பான விண்ணப்பத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக வங்கி சேவைகளை பெரும் வசதி அறிமுகப்படுத்தப்படும் நிலையில் பொதுமக்களுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.