தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியதால் அரிசிக்கு பதிலாக அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் சிறு தானியங்களும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இரு மாவட்ட ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி ஆக வழங்கப்படும் சிறுதானியங்கள் விரைவில் மாநிலம் முழுவதும் வழங்கப்படும். தற்போது தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய இரு மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கி கேழ்வரகு வழங்கப்படுகிறது. மேலும் தமிழக மக்களின் ஆரோக்கியத்தை பெருக்குவதற்காக இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.