ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ஆம் தேதி உலக மூலநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் மருத்துவமனை இந்திய பெருங்கடல், மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பாக நடைப்பயணத்தை அண்ணாநகர் கோபுரம் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்து பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு கோடி பேர் என மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நவம்பர் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை இலவச மூலநோய் பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இலவச மூலநோய் பரிசோதனை முகாம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.