தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் Health Walk Road திட்டத்தை முதல்வர்  முக ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். பொதுவாகவே மனிதர்கள்  தினந்தோறும் 8 கிமீ தூரம் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் சொல்கின்றன. தினந்தோறும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் ஏராளமானவர்கள் உடல் எடையை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிமீ சாலைகளை தேர்வு செய்து, அது ஹெல்த்வாக் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. மக்கள் உடல்நலம் பேணுவதை ஊக்குவிக்க தமிழக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது.