தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழக அரசு அமல்படுத்திய நிலையில் இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனை மேலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையினர் உடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.