தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சுமார் 1000 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு குடிநீரும் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். டெங்குவை ஒழிப்போம். பாதுகாப்பாக இருப்போம்.