தமிழகத்தில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு 6080 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாமக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட 72 ரயில் நிலையங்கள் 2024 மே மாதத்திற்கு சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுவதாக வேல்முருகன் தெரிவித்தார். மாமல்லபுரம் வழியாக சென்னை முதல் கடலூர் வரையிலும் மதுரை முதல் தூத்துக்குடி வரையிலும்  ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி உட்பட ஒன்பது புதிய ரயில் வழி தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.