மாநகர பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 9,620 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளில் 74.46 சதவீத பேருந்துகள் மகளிருகாக கட்டணம் இல்லாத பயணத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு ஒரு நாளைக்கு சுமார் 49.06 லட்சம் மகளிர் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். மகளிர் காண கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு நடப்பு நிதியாண்டில் 2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.