தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களின் நலனுக்காக நான்கு மாவட்டங்களில் 100 கோடியில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்ட  திட்டமிட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கயல்வழி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முழுவதும் தேவையான அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாட்கோ வங்கி கடன் பெறுவதில் அழைக்கழிக்க கூடாது எனவும் அவர் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அரசு ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக மூன்று கோடி நிதி ஒதுக்கி இருப்பதால் அதை சரியாக பயன்படுத்தி தேவையான மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.