
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தன்னுடைய முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் திமுகவை அந்த மாநாட்டில் நேரடியாகவே அரசியல் எதிரி என்றார். அதாவது குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சி தான் தங்களுடைய அரசியல் எதிரி என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பொதுமக்களை தேர்தல் வாக்குறுதிகள் மூலம் திமுக அரசு ஏமாற்றிவிட்டது என்று இன்று விஜய் விமர்சித்திருந்த நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தற்போது விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து திமுக கூட்டத்தில் அவர் கூறியதாவது, இன்னும் 25 வருடங்களுக்கு தமிழகத்தை ஆளப்போவது திமுக தான். யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. நாங்க போட்டு அடித்தளம் அப்படி என்று கூறியுள்ளார். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் பொய் வாக்குறுதிகளால் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அமைச்சர் கூறியுள்ளார்.