மத்திய அரசு கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படுகிறது. அந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்கப்படும். இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்போது சம்பளத்தை அரசு உயர்த்தி உள்ளது.

அதன்படி தற்போது ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 319 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் நிலையில் 17 ரூபாய் வரையில் உயர்த்தி இனி 336 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா மாநிலத்தில் அதிகபட்சமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 400 ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.