தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,திருப்பூர் தேனி திண்டுக்கல் தென்காசி நெல்லை கன்னியாகுமரி ஈரோடு கிருஷ்ணகிரி தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைப் போலவே நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.