தமிழகத்தில் தற்போது வீடுகள் தோறும் 100 யூனிட் மின்சாரம் என்பது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளில் மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரத்திற்கு இலவசம் போக கூடுதலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் சிலர் முறைகேடு செய்வதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் முறைகேடு செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.