அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தால் தற்போது 1545 அரசு பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்கள்  பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  இந்த திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள 500 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அடுத்து கூடுதலாகவும் பள்ளிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.