தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பதிலுரையில் பேசி அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்திலும் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி போன்ற மாநகராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

இந்த நகராட்சிகள் முதலமைச்சரின் அனுமதி பெற்ற விரைவில் மாணவர் ஆட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனைப் போலவே ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி மற்றும் திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும்,சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை இழந்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.