தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை முன்னெடுத்து செல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதி ஆண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்தும் விதமாக மூன்று சிறந்த பள்ளிகள்/ கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும் மாநில அளவில் மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதேபோல தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள்/ தனியார் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீ தம் பணம் வழங்கப்பட உள்ளது. இந்த 100 விருதுகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்று விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பசுமை சாம்பியன் விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 15 வரையிலும் மஞ்சப்பை விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் மே 1 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். எனவே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக வளாகங்கள்/ தனிநபர்கள்/ அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளமான (https://virudhunagar.nic.in.) ) மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இணைய தளமான (www.tnpcb.gov.in)-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலக வேலைநாட்களில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், விருதுநகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.