தமிழ்நாட்டில் புதியதாக 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போது சென்னை – மைசூரு, சென்னை – கோவை வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஐஆர்சிடிசி 2023-24 கலந்தாய்வுக் கூட்டத்தில், மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்க ஒன்றிய ரயில்வேவுக்கு முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை – விஜயவாடா, சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.