
கடலூர் மாவட்டத்தில் பத்மநாதன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக கட்சியின் வார்டு செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் பத்மநாபன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி பத்மநாதன் கீழே விழுந்தார். அதன் பின் காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமீப காலமாக கட்சிகளின் முக்கிய புள்ளிகள் படுகொலை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.