தமிழகத்தில் பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கட்டணம் இல்லா பேருந்து வசதி. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டம் மலைப்பகுதிகளுக்கு இன்னும் விரிவுபடுத்தப்படாமல் உள்ள நிலையில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டத்தை மலைப்பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று துறைசார் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டமானது விடியல் பயணத்திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் பயனடையும் வரை விரிவு படுத்த ஆய்வு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்துவதையும் பழைய பேருந்துகளை புதுப்பித்து இயங்கும் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.