தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் பயன்பெற ஆதாரிடிப்புடன் கூடிய வங்கிக் கணக்கு கட்டாயமான தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்குவதற்கு தற்போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு இந்தியா போஸ்ட் பேமென்ட் என்ற வங்கி கணக்கை தொடங்கலாம்.

அதேசமயம் மஞ்சள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைபேசி மற்றும் பயோமெட்ரி எந்திரம் மூலமாக கைபேசி எண்ணை வைத்து விரல் ரேகை மூலமாக ஒரு சில நிமிடங்களில் ஆதார இணைப்புடன் கூடிய வங்கி தொடங்கலாம் எனவும் இந்த கணக்கு தொடங்க வைப்பு தொகை எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாதாந்திர உதவி தொகையை அஞ்சலகங்களில் டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலமாக பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.