மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அதற்கான காரணம் குறித்து இன்று முதல் SMS அனுப்பப்படுகிறது. SMS வந்த உடன் இ-சேவை மையம் மூலம் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்தால், தீர்வு காணப்படும். மேலும், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வட்ட அளவில் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 பெற தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை அணுகி மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.06 கோடி பேருக்கு தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.