
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் ரேஷன் கடைகளில் இனி கோதுமையையும் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதாவது தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் கோதுமையை அதிகரித்ததால் பொதுமக்கள் 5 கிலோ வரையில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கும் தட்டுப்பாடு இருக்காது என்று தற்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் சமீப காலமாகவே ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருவதால் பச்சரிசி தேவை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அவர் இனி ரேஷன் கடைகளில் பச்சரிசி அதிக அளவில் விநியோகிக்கப்படும் என்றும் இனி தட்டுப்பாடு இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் இதன் காரணமாக இனி ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கு தட்டுப்பாடு இருக்காது.