தமிழகம் முழுவதும் சிலர் இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடி ஆகாது என்று  அதை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானது இல்லையா?  என்று குழப்பம் நீடித்து வருகிறது. ஏனென்றால் கடந்த வருடங்களாக தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கு முன்பாக புகைப்படம் இல்லாமல் தான் வழங்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரி கூறுகையில், இ சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் சாதி சான்றிதழ் குறித்து தவறான புரிதலை பெற்றுள்ளார்கள். மேலும் பழைய சாதி சான்றிதழ்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பழைய சாதி சான்றிதழ் கிழிந்தாலோ  அல்லது தொலைந்து விட்டால் மட்டும் புதிதாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மற்றபடி அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.