மார்ச் 2024ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மார்ச் 9ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.