தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த சார் யார் எனவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக கட்சியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டதோடு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்று சபதம் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய x பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம்  தெரிவிக்கும் விதமாகவும் குற்றவாளி திமுக காரன் என்பதால் உண்மைகளை வெளிக்கொண்டு வராமல் திமுக அரசு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனை கண்டிக்கும் விதமாக தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் நீதி பேரணி மாநில தலைவர் உமாரதிராஜன் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பேரணி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் நிலையில் சென்னையில் முடிவடையும் எனவும் அதன் பிறகு ஆளுநரை சந்தித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மனு கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.