தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற மாணவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் அனைத்தையும் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாக வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது