இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் நிரப்பும் பிளாண்டுகள் மொத்தம் 12 இடங்களில் இருக்கும் நிலையில் இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியும் அடங்கும். இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயுள் நிறுவனத்தின் பிளாண்டுகளிலிருந்து சிலிண்டர் ஏற்றி செல்லும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறது. அதன்படி வருகிற 1-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில் செல்வன் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
