தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதில் தகுதியுள்ள மகளிருக்கு கட்டாயம் உரிமைத் தொகை சென்றடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, குடும்ப தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே 1000 ரூபாய். இந்தத் தொகை வங்கிகளில் நேரடியாகவே வழங்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உதவி தேவைப்படும் அனைவருக்குமே ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.