தமிழகத்தில் சென்னை உட்பட மாநில ம் முழுவதும் கிறிஸ்துமஸ் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக தொடங்கியுள்ளது.