தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 15 கோவில்களில் ராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் 35 கோடி செலவில் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலமாக திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ஏழு கோடியில் ஐந்து நிலங்களை கொண்ட ராஜகோபுரம், கும்பகோணம் கீழப்பாளையாரை சோமநாத சுவாமி கோவில், விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், ஈரோடு வேலாயுத சாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில் உள்ளிட்ட 15 கோவில்களில் 26 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் திருவாரூர் பூவலூர் சதுரங்க வல்லவன் நாத சுவாமி கோவில் உட்பட 18 கோவில்களுக்கு புதிய மரத்தேர் 9.20 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.