
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் மட்டும் நடைபெற இருக்கும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படப்பிடிப்பின் போது விபத்தால் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் படப்பிடிப்பின் போது கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுப்பதற்காக இன்று படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது இதுகுறித்த விழிப்புணர்வு கமலா திரையரங்கில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் என கூறியுள்ளனர். இதனால் அனைத்து படப்பிடிப்பு சங்கத்தினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். வெளியூரில் எடுக்கப்படும் படப்பிடிப்புகள் அனைத்திற்கும் காலை 9 மணி முதல் 10 மணி வரை படப்பிடிப்பின் தளத்திற்கே சென்று விழிப்புணர்வு கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.