
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்பிறகு கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து வருகிற 6-ம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.