தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்துடன் சேர்ந்து ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 37.38 லட்சமாக இருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது நாள்தோறும் 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் மீண்டும் ஆவின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக ஜெர்சி கலப்பின கறவை மாடுகளை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் வழங்குவதற்கு ஆவி நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இரண்டு லட்சம் கலப்பின கறவை மாடுகள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 27 மாவட்ட ஒன்றியங்களில் 2 லட்சம் உற்பத்தியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வங்கி கடன் மூலம் ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். அதேசமயம் தமிழகத்திற்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.